பிங்கா ஓயா வெள்ளப்பெருக்கு

 

பிங்கா ஓயா வெள்ளப்பெருக்கு

மகாவலி நதியின் உபநதியான பிங்கா ஓயா அக்குறணை, குடுகல, அம்பத்தென்ன பிரதேசங்களுக்கு ஊடாக ஓடி கட்டுகஸ்தோட்டையில் மகாவலி நதியுடன் கலக்கின்றது. பிங்கா ஓயாவின் நீர்ப்பிடிப்பு பகுதியானது அதிகமான மக்கள் தொகையை கொண்டதும் வெள்ள அபாயம் உள்ளதும் மாசடைந்ததும் மண் அரிப்புக்கு உள்ளானதும் உயிரியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுமான பகுதியாகும். கடந்த தசாப்தங்களில் பிங்கா ஓயாவில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிங்கா ஓயாவின் நீர்ப்பிடிப்பு பகுதி உடனடி நடவடிக்கையும் மக்களிடையே விழிப்புணர்வும் தேவையான சிக்கல் நிறைந்த பகுதியாக இனங்காணப்பட்டுள்ளது.

குறிப்பு- 29 செப்டம்பர் 2018, சனிக்கிழமை மழைக்குப் பிறகு அகுரானா நகரில் மூழ்கிய தெரு. படம் அசெலா குருலுவன்சா, டெய்லி நியூஸில் வெளியிடப்பட்டது, திங்கள், அக்டோபர் 1, 2018- Link

 

 

குறிப்பு- ஹிரு செய்திகளில் வெளியிடப்பட்டது- 15 மே 2016  Link

 

 

 

 

 

 

 

1947 இல் அக்குறணையில் முதன்முறையாக வெள்ளம் பதிவுசெய்யப்பட்டது. அதன் பின்னர் அப்பிரதேசம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த வருடங்களில் ஆறும் அதன் சுற்றுப்புறமும் பேணப்படாமையால் திடீர் வெள்ளங்கள் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வருடங்களில் A9 வழிக்கு பக்கத்தில் கட்டடங்கள் பெருகியுள்ளன. இக்கட்டடங்களின் சில தமது கழிவு நீர் பிங்கா ஓயாவுக்குள் திறந்துவிடப்படுகின்றது.

குறிப்பு- வெளியிடப்பட்டது www.ft.lk- Link

ஜனவரி 30, 2001 அன்று அக்குறணையில் ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது துநுவில சந்தி 6 அடி வெள்ள நீரில் மூழ்கியது. மிகவும் அண்மையில், செப்டெம்பர் 29, 2018 அன்று ஏற்பட்ட வெள்ளமானது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக கருதப்படுகிறது. வெள்ள நீர் 8 அடி வரை உயர்ந்திருந்தது. இவ்வெள்ளதால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் 250 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல கடைகள் தமது கட்டுமானங்களை ஆற்றுக்குள் விரிவாக்கியிருக்கின்றன. பிங்கா ஓயாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று.

குறிப்பு-  Link

Photos Gallery

[Best_Wordpress_Gallery id=”2″ gal_title=”Pinga Oya”]