Heat Stress Sril Lanka

 

இலங்கையின் மலை நாட்டுக்கு அப்பால், ஏப்ரல் முதல் நிலவும் கடுமையான வெப்ப அழுத்தம்

கடந்த ஆறு மாதங்களில், இலங்கையின் சில பாகங்களில் நிலவும் வெப்ப வானிலையால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் 2019 இல் வெப்ப வானிலை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. நாம் 2019 இன் முதல் ஆறு மாதங்களில் நிலவிய வெப்ப வானிலை காரணமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தியுள்ளோம். ஒப்பு ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலை அளவுகள் மூலம் வெப்பச் சுட்டி கணக்கிடப்படுகின்றது. வெப்பச் சுட்டி உண்மையாக உணரப்படும் வெப்பநிலையின் அளவீடாகும்.

Heat Stress Sril Lanka
Monthly Average Heat Index of Sri Lanka for the First 6 Months of 2019
heat_index table

இலங்கையின் வெப்பச் சுட்டியின் அளவுகளை கருதுகையில், ‘வசதியான நிலை’ மத்திய மலைநாட்டில் குறிப்பாக நுவரெலியா, தியத்தலாவ, கண்டி ஆகிய இடங்களில் கடல் மட்டத்திலும் இடைநிலை மண்டலத்திலும் பார்க்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பச் சுட்டி அளவுகள் பருவகால மழை வீழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் வீழ்ச்சி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடும்

2019இன் முதல் ஆறு மாதங்களின் மாதாந்திர வெப்பச் சுட்டி வசதியான நிலையிலிருந்து அபாய நிலைக்கு மாறுகின்றது. ஜனவரி – மார்ச் காலப்பகுதியில் எச்சரிக்கை நிலை வடக்கு, வட மத்திய மாகாணங்களின் சிலப் பகுதிகளிலும் சில கரையோரப் பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளது. ஏப்ரல் – ஜூன் காலப்பகுதியில் அதிகப்படியான வெப்பநிலை காரணமாக உயர்ந்த வெப்பச் சுட்டி காணப்படுகின்றது. இக்காலப்பகுதியில் வட மாகாணத்தின் சிலப் பகுதிகளில் வெப்பச் சுட்டி அபாய நிலையை அடைந்துள்ளளது தீவிர எச்சரிக்கை நிலை வட மத்திய, கிழக்கு, வட மேல் மாகாணங்களிலும் கரையோரப் பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளது.

Monthly variation of Heat Index
Monthly variation of Heat Index during recent decades

ஆண்டு முழுவதும் வெப்ப குறியீட்டு மதிப்பு நிகழ்வுகளின் வடிவத்தைப் புரிந்துகொள்ள வெப்பச் சுட்டி பெறுமானங்களின் சராசரி ஆண்டு சுழற்சியைப் பெற்றுள்ளோம். இந்த வருடாந்திர சுழற்சிகள் 1986 – 2016 காலகட்டத்தில் மாதாந்திர வெப்பச் சுட்டி பெறுமானங்களின் சராசரியால் வகைப்படுத்தப்படுகின்றன. 2019 இன் முதல் ஆறு மாதங்களின் வெப்பச் சுட்டி பெறுமானங்கள் உயர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. வெப்பச் சுட்டி அட்டவணைக்கேற்ப, 1986-2016 காலப்பகுதியில், ஏப்ரல் – ஜூலை அபாய நிலை மற்றும் தீவிர எச்சரிக்கை நிலைக்குள் அடங்குகின்றது. அதேவேளை வருடத்தின் ஏனைய பகுதி வசதியான நிலை மற்றும் எச்சரிக்கை நிலைகளுக்குள் அடங்குகின்றது.  

Leave a Comment