தவறாக  திட்டமிடப்பட்டு மோசமாக செயல்படுத்தப்படும் வில்பத்துக்கு அருகிலுள்ள குப்பை கிடங்கினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள்

நாம் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியுள்ள அருவாக்கலு பிரதேசத்தை பார்வையிட்டோம்.  உலக வங்கியின் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவின் பெரு நகரங்கள் மற்றும் மேல் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் துரிதப்படுத்தபடும் சர்ச்சைக்குரிய திட்டத்தினால் கொழும்பு நகரின் நகரின் குப்பை புத்தளத்தில் கொட்டப்படவுள்ளது. (டெய்லி மிரர், 2019)

அருவாக்கலு குப்பை கிடங்கு

கொழும்பு மாநகர சபைக்குரிய பகுதியில் நிலவும்  கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வாக பெரு நகரங்கள் மற்றும் மேல் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் அருவாக்கலுவில் குப்பை கிடங்கொன்றை செயல்படுத்த திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி கொழும்பிலிருந்து அருவாக்கலுவுக்கு 170 km தூரத்தை கடந்து ரயில் போக்குவரத்து மூலம் நாளுக்கு 1200 டன் குப்பை கொண்டுசெல்லப்படவுள்ளது. களனியவில் கழிவு பரிமாற்ற நிலையம் நிறுவப்படவுள்ளது. இருப்பினும், கொழும்பில் உள்ள பிற உள்ளூர் அரசாங்க அமைப்புகளுக்கும் புத்தளத்தில் உள்ள உள்ளூர் அரசாங்க அமைப்புகளுக்கும் இக்கிடங்கு  திறக்கப்பட்டுள்ளது.

Aruwakkalu Landfill, reservation and buffer zones
Aruwakkalu Landfill, reservation and buffer zones

Final report, EIAR For the Proposed Project on Metro Colombo Solid Waste Management, MINISTRY OF URBAN DEVELOPMENT, WATER SUPPLY AND DRAINAGE, Central Environmental Authority, August 2015  (pp15-21) – link 

Proposed landfill site
Proposed landfill site

Final report, EIAR For the Proposed Project on Metro Colombo Solid Waste Management, MINISTRY OF URBAN DEVELOPMENT, WATER SUPPLY AND DRAINAGE, Central Environmental Authority, August 2015  (pp15-21) – link 


அருவாக்கலு – வில்பத்து இடையக மண்டலம்

சுற்றாடல் விஞ்ஞானியான பார் குமரகுலசிங்கவுடனான கலந்துரையாடலின் போது, அவர் நீர்நிலைகள், சூழலியலமைப்புகள் மற்றும் வனவிலங்குகளுக்கு குறிப்பாக குப்பை பதப்படுத்தும் மையத்துக்கு அருகாமையில் உள்ள மூன்று இக்கட்டான பிரதேசங்களுக்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல்களை அழுத்திக் கூறினார்.

  • குப்பை கிடங்கிலிருந்து வரும் கசிவினால் புத்தளம் – களப்பு மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் மீன் வளம் மற்றும் சூழலியலமைப்புகள் பாதிக்கப்படும். 
  • குப்பை பதப்படுத்தும் மையம் கலா ஓயாவிலிருந்து 3 km இல் அமைந்துள்ளதால் நீர் மாசடையும்.
  • வில்பத்து வனப்பகுதி 6 km இல் அமைந்துள்ளதால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
Different types of aquifers in Sri Lanka
Different types of aquifers in Sri Lanka (Panabokke and Perera, 2005)

நிலத்தடி நீர்: குப்பை கிடங்கு சீமெந்தினாலான உறையால் மூடப்படவுள்ளது. Holcim, INSEE சீமெந்து நிறுவனங்களின்  டைனமைட் வெடிப்பினால் இவ்வுறையில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவ்வாறு வெடிப்பு ஏற்பட்டால் கசிவுகள் நீர்வழிகள் மற்றும் நிலத்தடி நீரை வந்தடையும்.

மேலும் இப்பிரதேசத்தில் குறுகிய காலத்தில் கடும் மழை பெய்வதால், ஒன்றரை மாதங்களில் கிட்டத்தட்ட 2000 mm – குப்பை கிடங்கு நிரம்பி வழியும்; நீர் நிலைகள் மாசடையும்.

Links: https://wilpattuhouse.blogspot.com/2015/10/colombo-garbage-to-wilpattu.html

https://wilpattuhouse.blogspot.com/2015/10/update-colombo-garabge-to-wilpattu.html

S.M. முபாரக் அவர்களுடனான கலந்துரையாடல்

Mr. S.M. Mubarack

சுற்றுச்சூழல் ஆய்வாளரும் அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரியுமான S.M. முபாரக் பல ஆண்டுகளாக இப்பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார். பேரழிவுகரமான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கொண்ட திட்டங்கள் புத்தளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன மற்றும் சுற்றுச்சூழல் இனவாதப் பிரச்சினை பற்றிய கேள்விகளை அவர் எழுப்புகிறார். அருவாக்கலுக்கு குப்பைகளை கொண்டு வரும் திட்டம் சமீபத்தியது.

அபாயத்துடனான தளம்

அருவாக்கலு குப்பை கிடங்காக பயன்படுத்த மிகவும் பொருத்தமற்றது. ஏனெனில் குப்பை கிடங்கு சுண்ணாம்பு கல்லுக்கு மேலுள்ளது. சுண்ணாம்பு கல் நாளொன்றுக்கு 1200 டன் குப்பையை தங்கக்கூடியதல்ல.

சந்தேகப்படத்தக்க கொடுக்கல் வாங்கல்கள்

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பத்து வருடங்களுக்கு குப்பை கொட்டப்படும் என கூறிய போதும் அமைச்சர் எண்பது வருடங்களுக்கு குப்பை கொட்டப்படும் என்கிறார். இத்திட்டத்திற்கான நிதி அண்ணளவாக 274 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கி, AIIB (சீன வங்கி) களிடமிருந்து பெறப்படவுள்ளது. இந்தளவு நிதி குப்பை கிடங்கு திட்டத்தை விட கட்டிட திட்டமொன்றிற்கே பொருத்தமானது. இத்திட்டம் உலக வங்கியின் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கியதனால் உலக வங்கி 115 மில்லியன் அமெரிக்க டாலர்களை மீளப்பெற்றுள்ளது. இதன் பின் 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.  

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் ஒரு பகுதியாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தரப்பட்டுள்ள நிபந்தனைகள் முற்றாக மீறப்பட்டுள்ளன. குப்பை ரயில் மூலம் கொண்டுவரப்படும் எனக்கூறிய போதும் குப்பை டிரக் மூலமே கொண்டுவரப்படுகின்றது.

சமூக ஆலோசனைகளின் பற்றாக்குறை

சமூக ஆலோசனை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். கழிவு பரிமாற்ற நிலையம் அமைந்துள்ள களனியவில் பதினைந்து பேரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அருவாக்கலுவில் இரண்டு பேரிடம் மாத்திரமே ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இவற்றில் ஒருவர் பௌத்த மதகுரு மற்றவர் விவசாயி. புத்தளத்தின் எந்தவொரு உள்ளூர் அரசாங்க அமைப்பும் அருவாக்கலுவில் குப்பை கொட்டவில்லை; ஆனால் வகைப்படுத்தப்படாத குப்பை இங்கு வகைப்படுத்தப்படுகிறது. குளியாபிட்டிய நகர சபை பகுதியிலிருந்து துர்நாற்றமுடைய குப்பை அருவாக்கலுவில் கொட்டப்படுகின்றது. இந்த முழு திட்டத்தையும் பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பொது மக்கள் எதிர்த்துள்ளனர். ஆனால் அமைச்சர் சம்பிக்க ரணவக சர்வாதிகார முறையில் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றார். இது தவிர சில கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் அணுகப்பட்டுள்ளனர். குப்பை முகாமைத்துவம் பற்றி மிகவும் அறியாத அவர்கள் இத்திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர்.

ஆதாரங்கள்

  1. Barr-Kumarakulasinghe, S, Colombo, Meethotumulla Garbage is not to Puttalam but the Wilpattu, October 14, 2015, Blogpost. http://wilpattuhouse.blogspot.com/2015/10/colombo-garbage-to-wilpattu.html
  2. Barr-Kumarakulasinghe, S, Colombo, Update – Colombo Garbage to Wilpattu, October 14, 2015, Blogpost. http://wilpattuhouse.blogspot.com/2015/10/update-colombo-garabge-to-wilpattu.html
  3. Kamanthi Wickramanasinhghe, Aruwakkalu Landfill Project Another White Elephant, Daily Mirror, 14 August 2019. http://www.dailymirror.lk/news-features/Sanitary-project-Aruwakkalu-landfill-another-white-elephant/131-172841
  4. Malaka Rodrigo, Environmentalists derail garbage train to Aruwakkalu, Sunday Times, October 4, 2015. http://www.sundaytimes.lk/151004/news/environmentalists-derail-garbage-train-to-aruwakkalu-166659.html
  5. Environmental Impact Assessment Report of the Proposed Project on Metro Colombo Solid Waste Management, Ministry Of Megapolis and Western Development, August 2017. https://ewsdata.rightsindevelopment.org/files/documents/55/AIIB-000055_LdaZhb5.pdf

Leave a Comment