கல்பிட்டிய வளி மாசுபாடு

வளி மாசுபாடு

அறிமுகம்:

வளி மாசுபாடு போதியளவு கவனம் செலுத்தப்படாத ஒரு பிரச்சினையாகும், அதன் தாக்கங்களும் குறைவாக mathipidaப்பட்டுள்ளன. இலங்கையில் உள் மூலங்கள், நாட்டின் வடக்கு எல்லை கடந்த மூலங்களிலிருந்து வரும் மாசுகளினால் வளி மாசுபாடு அதிகரித்து வருகின்றது. வளி மாசுபாடு சார்ந்த பிரச்சினைகள் வாகனங்களிலிருந்து வெளிவிடப்படும் துகள்களினாலும் நச்சு வாயுக்களினாலும், குறிப்பாக அனல் மின் நிலையங்களினால் வெளிவிடப்படும் வாயுக்களினாலும், விரைவான நகரமயமாக்களினாலும், ஆசிய கண்டத்தின் வளிமண்டல அசுத்தங்களின் எல்லை தாண்டிய போக்குவரத்தினாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் வளி மாசடைவதில் பிரதான பங்களிப்பு துகள்களினால் ஏற்படுகின்றது. ஏனெனில் துகள்களின் அளவுகள் WHO வின் பரிந்துரையை தொடர்ந்து மீறியுள்ளன. 1997 முதல் 2003 வரை SO2 வின் அளவுகள் அதிகரித்துவந்துள்ள போதும் அவை USEPA வின் பரிந்துரைக்கு நெருக்கமான அளவில் இருந்துள்ளன. வருடாந்திர NO2வின் அளவுகள் தொடர்ந்து WHO வினதும் USEPA வினதும் பரிந்துரைகளுக்கு அமைவாக இருந்துள்ளன.

வாகனங்களிலிருந்து வெளிவிடப்படும் வாயுக்கள்:

மற்றைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுடன் ஒப்பிடுகையில் பெற்றோலியப் பாவனைஅதிகரிப்பதை சக்தி பாவனை போக்குகள் காட்டுகின்றன. நாடு விரைவான மோட்டார்மயமாக்கலையும் கண்டிருக்கிறது (உதா: ஒரு தசாப்தத்தில்: 1991 – 2000 மோட்டார்களின் எண்ணிக்கை இரட்டிப்பு). 2011 இல் இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சின் மதிப்பீட்டிற்கு அமைய 55-60% வளி மாசுபாடு வாகனங்களின் புகையினாலும், 20-25% கைத்தொழில்களினாலும், 20% வீடுகளிலிருந்தும் வருகின்றன. அண்மையில் வாகனப் புகை பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டிகளின் புகை காரணமாக நகர் புறங்களில் வளியின் தரம் சீர்கெடுகின்றது.

மின் உற்பத்தியினால் வெளிவிடப்படும் உமிழ்வுகள்:

தேவை அதிகரிப்பதனாலும் நீர் மின் உற்பத்தி குறைவடைவதாலும் அனல் மின் உற்பத்தி அதிகரிக்கின்றது. 2011 முதல், புத்தளத்தின் 900 மெகாவாட் அனல் மின் நிலையம் உட்பட மின் உற்பத்தி ஆலைகள் நிறுவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வளி மாசுபாடு – நுரைச்சோலை:

லக்விஜய மின் நிலையம் எனப்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவை உற்பத்தி செய்கின்றது. நுரைச்சோலை அனல் மின் நிலையம் கல்பிட்டிய தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத் 900 மெகாவாட் மின் நிலையத்தால் வெளிவிடப்படும் வாயு அனுமதிக்கப்பட்ட தரநிலைகளை விட மேற்பட்டதாக காணப்படுகின்றது. இதற்கு மின் நிலையத்தின் அடிக்கடி செயலிழப்பு, இடைப்பட்ட செயற்பாடு மற்றும் எதிர்பாராவிதமான – திறந்த வெளிகளில் அனல் சேமிப்பு காரணமாகலாம்.

மின் உற்பத்தி நிலையம் அதிக அளவு திடக்கழிவுகள், வெப்பம் மற்றும் சூடான நீரை வெளியிடுவதால் நீர் மாசுபடுவதற்கும் வழிவகுக்கிறது. இது நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள எமது கருவிகள்:

நாம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள தோட்டமொன்றில் வளியின் தரத்தை கண்காணிக்கும் கருவியொன்றையும் 2 தானியங்கி வானிலை கருவிகளையும் நிறுவினோம். இக்கருவிகள் மூலம் காபனீரொடசைட்டின் அளவு, துகள்கள், உட்புற மற்றும் வெளிப்புற வெப்பக்குறியீடு, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. மேலும் இத்தரவுகள் உடனுக்குடன் வலைத்தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. தானியங்கி வானிலை கருவி 3 மாதங்களின் தரவுகளை தனது நினைவகத்தில் (memory) சேமித்து வைக்கக்கூடியது. ஏனைய வானிலை கருவிகள்  சூரிய கதிர்வீச்சு, மழைவீழ்ச்சி, வளி அமுக்கம், காற்றின் வேகம் மற்றும் திசை ஆகிய தரவுகளை ஆன்லைனுக்கு (online) அனுப்புகின்றன.

Following is the web link for the Norocholai Air Quality data –      Click here

Published Newspaper article regarding Sampur Coal Plant pollutants:

The Sampur Coal Plant pollutants article written up by our team was published on several Newspapers and it discuss questions like “Is the air pollution analysis for the Sampur Coal Plant credible?”, “Where does the wind take pollutants from Sampur?”

     Daliy News     Daily FT      The Sunday Leader

And as Web Articles

     SL Guardian     Groundviews     For full article click here

Videos:
2019 #World_Environment_Day w/ theme #BeatAirPollution. In #lka , we find alarming rise in air pollution in Puttalam, Nawalapitiya & Colombo from #coal using instruments of @climatelk & @USEmbSL @Dilmah @NalakaG

For more video Checkout our YouTube channel