வளியின் தரம்

வளியின் தரம் கண்காணிப்பு 

இலங்கையில், நகர்ப்புற இடங்களிலும், கைத்தொழில்களுக்கு நெருக்கமான இடங்களிலும் மற்றும் உயிர்த்திரள் எரியும் இடங்களிலும் வளியின் தரம் மோசமடைந்து வருகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சில நகர்ப்புறங்களில் வளி சீரழிவு விகிதம் மக்கள்தொகையில் பெரும் பங்கை சுவாச நோய்கள் மற்றும் பொது உடல்நலக்குறைவுகளுக்கு ஆளாக்குகிறது

இந்த பக்கத்தில், பின்வரும் இடங்களில் காற்றின் தரத்தின் நிகழ்நேர புதுப்பிப்புகளை நாங்கள் முன்வைக்கின்றோம்

 • நுரைச்சோலை  
 • புத்தளம்
 • இலந்தண்டிய
 • நாவலபிட்டிய
 • அக்குறணை
 • கொழும்பு
 • திகன  

குறிப்பு, இணைப்பு சிக்கல் காரணமாக எல்லா கருவிகளும் தரவுகளை புதுப்பிக்காது. மேலே, இந்த தரவை அணுக வரைபட அடிப்படையிலான சுட்டிகளை காணலாம்.

எங்கள் வேலை

நாம் மேற்கொள்ளும் பணிகள்:

 • கண்டி, கொழும்பு, புத்தளம் மற்றும் பிற நகர்ப்புறங்களுக்கான தினசரி மாறுபாடுகளுடனான வளி மாசுபாடு தரவுகள், பருவகால மற்றும் வருடாந்திர மாறுபாடுகளுடனான கடந்த வளி மாசுபாடு தரவைக் கண்டறிதல்..
 • காலநிலை மாறுபாட்டுடனான உறவை மதிப்பிடுதல்
 • இலங்கை யில் காற்று மாசுபாட்டின் போக்குவரத்தை மாதிரியாக்குதல்
 • கண்டி, நாவலபிட்டிய, கொழும்பு, புத்தளம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பில் 10 நிலையங்களிலிருந்து துகள்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றிய வளியின் தரவுகளை உடனுக்குடன் பெறுதல்..
 • காற்றின் தரவுகளை ஆன்லைனில் புதுப்பிக்கப்படும் களஞ்சியமொன்றில் பராமரித்தல்
 • சுகாதார பாதிப்புகளை மதிப்பிடுவதில் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
 • புதுப்பிக்கப்பட்ட, வளியின் தரத்தை காட்டும் வரைபடத்தை உருவாக்குதல்
எங்கள் ஆன்லைன் நிலையங்களுக்கான இணைப்புகள் மற்றும் வரைபடங்களைக் கீழே காணலாம்.