வலையமைப்பு

அனர்த்த சேவைகள் வலையமைப்பு (DSN) அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மீட்டெடுப்பை ஆதரிக்கும் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இவ் வலையமைப்பு 2018 மார்ச் இல் நடைபெற்ற கும்பல் வன்முறைக்கு விடை கொடுக்கும் முகமாக தொடங்கப்பட்டது. எங்கள் வலையமைப்பு அனர்த்த சேவை மையத்தை ஆதரிக்கும் ஆலோசனைக் குழுவாக செயல்படுகிறது. நாம் மீட்பு மற்றும் இடர் நிர்வாகத்தை ஆவணப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் உதவுதல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளோம். நடந்த வன்முறை பற்றிய விரிவான தகவல்களின் காப்பகத்தை டிஜிட்டல் மற்றும் காகிதத்தில் நிறுவவும் நாங்கள் முயல்கிறோம்.

↓ எமது கடந்தகால செயற்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.
 • மோப்ரே கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்கு
  நடத்தினோம்,
 • மோப்ரே கல்லூரியில் கூட்டம் நடத்தினோம்.
 • Law and society trust குழுவின் உறுப்பினர்களை கண்டு கலந்துரையாடினோம்.
 • உகுரெஸ்ஸப்பிட்டிய எண்டறதென்ன மற்றும் குருந்துகொல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட்டோம்.
 • young friends சங்கத்தின் மூலம் தகவல்களை பெற்றோம்.
 • அக்குறணை சமாதான குழுவுடன் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
 • நிவாரணத்துடன் தொடர்புடைய இளைஞர்களை சந்தித்தோம்.
 • பள்ளி அறங்காவலரகளை சந்தித்தோம்.
 • பத்திரிகையாளர்களுக்கு உதவினோம்.
 • நல்லிணக்கம் கொண்டு மெனிக்கின்ன நூலகத்தில் மாணவர்களுக்கு நிகழ்ச்சியொன்றை நடத்தினோம்.
 • இலங்கை கால்நடை பராமரிப்பு பள்ளி – குண்டசாலையில் நடைபெற்ற நல்லிணக்க
  திட்டத்தில் ஈடுபட்டோம்.
 • புனர்வாழ்வு அமைச்சு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் துறைக்கு விஜயம்
  செய்தோம்.
 • பிரதமர் ஏற்பாடு செய்த அலரி மலர் மாளிகையில் நடைப்பெற்ற நல்லிணக்க திட்டம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டோம்.
 • பலகொல்ல கோயிலில் நடைபெற்ற கும்பல் வன்முறை தொடர்பான கூட்டத்தில்
  கலந்து கொண்டோம்.
 • திட்ட மறுஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.