வறட்சி

 

வறட்சி கண்காணிப்பு

மேலும் விபரங்களுக்கு எங்களது  Drought portal   பார்வையிடவும்.

வறட்சி பெருமளவிலான இலங்கையர்களை பாதிக்கும் அனர்த்தமாகும். வறட்சி, மழை பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான நீராவியாதல் (வானிலை), நீரோட்டம் மற்றும் மண்ணின் ஈரப்பதம் (நீர்நிலை) என்பனவற்றின் பற்றாக்குறை, விவசாயத்தின் மீதுள்ள பாதிப்புகள் (விவசாயம்) அல்லது மக்கள் மற்றும் சூழியலமைப்புக்கள் மீது கொண்டுள்ள தாக்கங்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம். வறட்சி குறியீடுகளால் (index) அளவிடப்படும் மழை பற்றாக்குறையுடன் நிவாரண கொடுப்பனவுகள் உறுதியான தொடர்புடையவை என்பதை நாங்கள் காண்கிறோம் (Lyon et al., 2011).

SPI Map-2019 (Apr-Jun) and SPI Time Series for the 4 Climate Regions from May 2001 to June 2019
Figure 1: SPI Map for the Past Three Months of 2019 (Apr-Jun) and Three Monthly SPI Time Series for the 4 Climate Regions from May 2001 to June 2019

இலங்கையைச் சுற்றியுள்ள பகுதியில், கடந்த 3 மாதங்களில் கணக்கிடப்பட்ட, Standardized Precipitation Index (SPI) என அழைக்கப்படும் வறட்சி குறியீடு (index) கீழ் காணும் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, மேலும் இரத்தினபுரி – மாவட்டங்களுக்கு இடையிலான எல்லை அதிகூடிய வறட்சியை காட்டுகின்றன.

கடந்த 19 ஆண்டுகளுக்கான வறட்சி குறியீடுகள் (index) காட்டப்பட்டுள்ளது. வறட்சியின் கடுமைத்தன்மை பட்டைகளாக காட்டப்பட்டுள்ளது. கபில நிறத்தின் செறிவு வறட்சியின் தன்மையைக் குறிக்கின்றது. நிகழ்காலத்தில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிடத்தக்க வறட்சி நிலவுகின்றது. எனினும் இவ்வறட்சி 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நிலவிய வறட்சியியை போன்று கடுமையானதல்ல.

மழைவீழ்ச்சி கண்காணிப்பு

 

கீழேயுள்ள உருவங்கள் டெக்காடலின் (மாதத்திற்கு மும்முறை கணக்கிடப்படும் மழைவீழ்ச்சி – dekadal) மாறுபாட்டைக் காட்டுகின்றன. வரைபடம், செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கி 2018/19 இன் மகா பருவத்தின் முதல் பாதியின் முரண்பாடுகளைக் காட்டுகிறது.

 

Maha season
படம் 2: மகா பருவத்தின் முதல் பாதி 2018/19 ஒவ்வொரு மாதத்தினதும் முரண்பாடுகள்

 

Comparison of current rainfall past 6 Years
படம் 3: கடந்த 6 ஆண்டுகளின் மழை வீழ்ச்சியின் ஒப்பீடு

 

Dekadal 10-Day rainfall
படம் 4: 2018/19 மகா பருவத்தின் முதல் பாதியின் டெக்காடல் (10-நாள்) மழை வீழ்ச்சியின் கடந்த சராசரியுடனான ஒப்பீடு.  நீல நிற பட்டைகள் சராசரிக்கு அதிகமான மழைவீழ்ச்சியையும் கபில நிற பட்டைகள் சராசரிக்கு குறைவான மழைவீழ்ச்சியையும் குறிக்கின்றன.