மீரியபெத்த நிலச்சரிவு

மீரியபெத்த நிலச்சரிவு

இலங்கையை அதிகம் தாக்கும் அனர்த்தங்களுள் நிலச்சரிவும் அடங்கும். பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மீரியபெத்த பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டது. மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் இந்த நிலச்சரிவு தூண்டப்பட்டது. இந்த அனர்த்தத்தினால் கொஸ்லாந்தைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிர், உடைமைகளுக்கு பெரிதும் சேதம் ஏற்பட்டது. 16 இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டன, 192 பேர் காணாமல் போனதாக கருதப்படுகின்றனர், 150 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டன. இயற்கை காரணங்களும், இயற்கைக்கு எதிரான மனிதச் செயற்பாடுகளும் இந்நிலச்சரிவிற்கான காரணங்களாகும்.

Sources Text

https://www.nbro.gov.lk/images/content_image/pdf/symposia/26.pdf

Sources Pictures

https://www.jica.go.jp/srilanka/english/office/topics/c8h0vm00009e4e8s-att/150624_01.pdf

Daily rainfall hydrograph - Meeriyabedda estate
Graph credits- Jagath Gunatilake for GIS and Numerical simulation-based model for prediction of vulnerability on mountain tsunami at Meeriyabedda, Sri Lanka- Conference Paper

Related Videos