மாத்தறை சூறாவளி – 2017

மாத்தறை சூறாவளி – 2017

இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டமானது வெப்பமண்டல காலநிலையை கொண்டது. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாத்தறையை பெரும் சூறாவளி தாக்கியது. இது பல இடங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியது. கடுங்காற்றுடன் கூடிய அடை மழை கொழும்பு நகரின் பல பாகங்களில் சீரழிவுகளை ஏற்படுத்தியது. “ஓகி” (Ockhi) எனப்படும் புயல் இலங்கையை நவம்பர் 30ஆம் திகதி வந்தடைந்தது. அன்றிரவு மணியளவில் காலநிலை மோசமடைந்ததை தொடர்ந்து மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்கு முகங்கொடுத்தன. மின் கம்பிகள் மீது மரங்கள் சரிந்ததால் நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டது. அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காலி, பதுளை, கம்பஹா, கொழும்பு, அம்பலாங்கொட ஆகியனவாகும்.

இந்த அனர்த்தத்தால் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போனார். 61 பேர் காயமடைந்தனர். உயிரிழப்புகள் காலி, பதுளை, மாத்தறை, கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டன. இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கமைய 16 மாவட்டங்களை சேர்ந்த 106,000 பேர் பாதிக்கப்பட்டனர். 25,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன; அவற்றுள் கிட்டத்தட்ட 700 வீடுகள் முற்றாக சேதமடைந்தன.