இரத்தினபுரி வெள்ளம்– May 2003

இரத்தினபுரி வெள்ளம் – மே 2003

2003 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 19 வரை பெய்த கடும் மழையால் இரத்தினபுரி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்தறை, காலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை அனர்த்தமாகும். வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் 260 பேர் உயிரிழந்தனர். வீடுகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டது. வெள்ளம் 5 – 20 அடி ஆழமாய் பதிவுசெய்யப்பட்டது. பல கட்டிடங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக இரத்தினபுரி நகரின் மணிக்கூட்டு கோபுரம் 15 அடி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஒரு கிராமத்தை முற்றாக அழித்த மண்சரிவிற்கு பின் 47 சடலங்கள் மீட்கப்பட்டன. மொத்தத்தில் 180,000 பேருடைய வீடுகள் அழிக்கப்பட்டன / சேதத்திற்குள்ளாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 700 பேர் காணாமலாக்கப்பட்டனர். 129,000 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டது. 120,000 பேருக்கு வேறு இடங்களில் தஞ்சம் வழங்கப்பட்டது. நிலப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஹெலிகொப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ்வனர்த்தத்தை கையாள 4 அங்கத்தவர்களை கொண்ட விசேட ஜனாதிபதி செயலக குழு நியமிக்கப்பட்டது.

மே மாதம் 13 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாகிய சூறாவளி இலங்கையை தாக்கியது. அதனை தொடர்ந்து நாட்டின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடுமையான மழை பெய்தது.