இரத்தினபுரி வெள்ளம் – மே 2016

இரத்தினபுரி வெள்ளம் – மே 2016

15.5.2016 அன்று இலங்கையைத் தாக்கிய வெப்பமண்டல சூறாவளி கடுமையான வெள்ளப்பெருக்கையும், குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் பல மண் சரிவுகளையும் ஏற்படுத்தியது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அமைய, இவ்வனர்த்தங்களினால் 300, 000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 104 பேர் உயிரிழந்தனர்; 99 பேர் காணாமலாக்கப்பட்டனர். அனர்த்தத்தின் விளைவாக 21,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க நேரிட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட தகவல்களின் படி 623 வீடுகள் அழிக்கப்பட்டன; 4,414 வீடுகள் சேதமடைந்தன. இவ்வனர்த்தம் கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான வெள்ளமாக பதிவுசெய்யப்பட்டது.