அரநாயக்க நிலச்சரிவு

அரநாயக்க நிலச்சரிவு

இலங்கையில் அதிகம் நிகழும் அனர்த்தங்களுள் நிலச்சரிவும் சூறாவளியும் அடங்கும். செங்குத்தான சரிவுகளில் கட்டடங்கள் கட்டுப்படுதல், மண்ணின் அளவு, மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் மூடுபடை பயிர்கள் நீக்கப்படுதல், நீர் தேங்கி நிற்றல், அதிகப்படியான மண்ணின் ஈரப்பதம், கவனக்குறைவான மனித செயற்பாடுகள் ஆகியன நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் காரணிகளாகும்.

அரநாயக்க பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 17-05-2016 ஆம் திகதி பாரிய அளவிலான நிலச்சரிவொன்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் அதிகாலை 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல கிராமங்களின் பகுதிகள் முற்றாக புதைக்கப்பட்டன, 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் சேதமடைந்தன. 2016ஆம் ஆண்டு மே மாதம் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை இந்நிலச்சரிவு ஏற்படுவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது.

இந்நிலச்சரிவு திப்பிட்டியவில் உள்ள சமசர குன்றின் வடகிழக்கு நோக்கிய சரிவில் இடம்பெற்றது. நிலச்சரிவு இடம்பெற்ற பரப்பில் தேயிலை மற்றும் இறப்பர் பயிற்செய்கைகள் காணப்பட்டதன, பின்னர் இவை 1960களில் மனிதக் குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. இங்கு குடியேறிய மக்கள் தேயிலை மற்றும் ஏனைய சிறு ஏற்றுமதி பயிற்செய்கையில் ஈடுப்பட்டனர். இந்நிலச்சரிவால் 350 000 பேர் பாதிக்கப்பட்டனர். பலர் இடம்பெயர நேரிட்டது. 600 ஹெக்டயருக்கும் மேற்பட்ட அளவிலான நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.

Aranayake Search Operations
கிட்டத்தட்ட 220 குடும்பங்கள் நிலச்சரிவின் பின் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டது. [EPA] ஆதாரம் – https://www.aljazeera.com-Link
A collapsed house
கம்துன, அரநாயக்கவில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடொன்று

Videos